நேற்று முன்தினம் வனவிலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு அக்டோபர் 4 உலக வனவிலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டுள்ளது.
தாவரங்கள் மற்றும் மனிதர்களைப் போலவே நமது சுற்றுச்சூழல் அமைப்பில் விலங்குகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் நகரில் கடந்த 1931-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு காங்கிரஸ் மாநாட்டில் உலக விலங்குகள் தினமாக அக்டோபர் 4-ஆம் தேதி பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி விலங்குகளின் நலனை பாதுகாப்பது, நிதி திரட்டுதல், விலங்குகளுக்கான தங்கும் இடங்களை உறுதிசெய்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விலங்குகள் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டுள்ளது. மேலும் உலக விலங்கு காதலர்கள் தினம் என்றும் இந்த தினம் அழைக்கப்பட்டு வருகிறது.