அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதே பகுதியில் வசிக்கும் தவிட்டு ராஜ் என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜிடம் இருந்த 20 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்ததோடு அவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து வெற்றிலையூரணி பகுதியிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பிச்சைக்கனி மற்றும் தமிழ்செல்வன் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 25 கிலோ சரவெடியை பறிமுதல் செய்ததோடு அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.