Categories
சினிமா தமிழ் சினிமா

எப்போது விவாகரத்து செய்ய போறீங்க… ரசிகரின் கேள்விக்கு பதிலடி தந்த வித்யூலேகா…!!!

நீங்கள் எப்போது விவாகரத்து செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை வித்யூலேகா. 

நகைச்சுவை நடிகை வித்யூலேகா கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான”நீதானே என் பொன்வசந்தம்”படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், வேதாளம் போன்ற படங்களிலும் காமெடி நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.

சமீபத்தில் சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றுள்ள வித்யூலேகா, அங்கு நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்திற்கு பலர் கடுமையான கருத்துக்களை கொண்டு விமர்சித்து வருகின்றனர். சிலர் நீங்கள் எப்போது விவாகரத்து செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியும் கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த வித்யூலேகா,” நான் நீச்சல் உடை அணிந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்தால் உங்களுக்கு விவாகரத்து எப்போது என்று கேட்கின்றனர். நீங்கள் 1920 காலத்திலேயே இருக்கிறீர்கள்.அதை விட்டு 2021 காலத்திற்கு வாருங்கள். அதே சமயம் ஒரு பெண் உடை அணிவதை கொண்டு விவாகரத்தை தீர்மானிக்க முடியாது.

மேலும், பாரம்பரிய உடைகள் அணிந்திற்கும் பெண்கள் அனைவருமே தங்கள் திருமண வாழ்க்கையில் மிகவும் சந்தோசமாக தான் இருக்கிறார்களா” என்றும் ”எனது கணவர் நேர்மை மற்றும் அன்போடு இருக்கின்றவர். உங்கள் தீய எண்ணங்களுக்காக  நான் என்னை மாற்றிகொள்ளப்போவதில்லை. மேலும் நீங்கள் பெண்களை பாலியல் நோக்கில் மட்டுமே பார்க்கிறீர்கள். வாழு வாழ விடு” என்று கோபமாக பதிலளித்துள்ளார்.

வித்யூலேகா

Categories

Tech |