சாய்பாபா கோவிலில் நாளையில் இருந்து பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பக்தர்களின் தரிசனத்துக்காக சில முக்கிய கோவில்கள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலமான சீரடியில் அமைந்துதிருக்கும் சாய்பாபா கோவில் நாளையில் இருந்து திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்பின் கோவிலில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்க இருப்பதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சில கட்டுப்பாடுகளுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கோவிலுக்குள் வருவதற்கு அனுமதி கொடுக்கப்படும். இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.