நடிகர் ஆர்யா நெற்றிக்கண் பட இயக்குனர் மிலிந்த் ராவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் சினிமாவை விட வெப் தொடரில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் பல முன்னனி நடிகர்கள், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா முதல்முறையாக வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெப் தொடரை மிலிந்த் ராவ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மிலிந்த் ராவ் இயக்கும் இந்த வெப் தொடரில் வாணி போஜன் கதாநாயகியாகவும், பசுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கின்றனர். விரைவில் இந்த வெப் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.