Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜெய் பீம்’ பட நடிகைக்கு திடீர் திருமணம்… வெளியான அழகிய புகைப்படம்… குவியும் வாழ்த்து…!!!

நடிகை லிஜோமோல் ஜோஸ் தனது திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்து 2019-ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். இவர் இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வருகிற நவம்பர் 2ஆம் தேதி இந்த படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. மேலும் மலையாள நடிகையான லிஜோமோல் ஜோஸ் தற்போது மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

 

Sivappu Manjal Pachai' actress Lijomol Jose gets hitched - Tamil News -  IndiaGlitz.com

இந்நிலையில் லிஜோமோல் ஜோஸுக்கு கேரளாவை சேர்ந்த அருண் ஆண்டனி என்பவருடன் கிறிஸ்துவ முறைப்படி நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தற்போது தனது திருமண புகைப்படங்களை லிஜோமோல் ஜோஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |