Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது போலியானது…. பெண் பணி நீக்கம்…. போலீஸ் விசாரணை….!!

போலியான சான்றிதழ் மூலமாக பயிற்சி பெற்று வந்த பெண் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகரி குப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மையம் அமைந்திருக்கிறது. இந்த மையத்தில் இந்தியாவின் பிற மாநிலத்திலிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யபடுகின்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி சி.ஐ.எஸ்.எப் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருக்கும் காமோஷ் ராவத் என்ற பெண் பயிற்சி பெற்றார். இதனை அடுத்து இவருடைய சான்றுதழ்களை சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு அனுப்பி வைத்ததில் அவரின் இருப்பிட சான்றிதழ் போலியானது என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அலுவலர்கள் அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தொடர்பாக தக்கோலம் காவல்நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் காவல்துறை இன்ஸ்பெக்டர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது காமேஷ் 12-ஆம் வகுப்பு வரை ராஜஸ்தான் மாநிலத்தில் படித்ததும், இவரது தந்தை நாகாலாந்து மாநிலத்திற்கு சென்று வியாபாரம் செய்த போது சி.எஸ்.ஐ போலீஸ் பணிக்கு தேர்வு நடப்பதால் அங்கு வசிப்பதாக இருப்பிடச் சான்றிதழ் பெற்று சமர்பித்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |