சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மும்பை சீரடியில் உள்ள சாய்பாபா கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவிலில் பக்தர்கள் அனுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாலும் நாளை முதல் கோயிலில் பக்தர்களை அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் அனுமதிக்கப்படுவர் எனவும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இருக்க வேண்டும் எனவும், முககவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் எனவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும், கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.