விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை மதுபான விற்பனை தொடர்பான வழக்கில் அம்மாபேட்டை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் ராமச்சந்திரன் புதுக்கோட்டை சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென ராமச்சந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் ராமச்சந்திரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கணேஷ் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.