Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் நாளை பிரம்மோற்சவ விழா கோலாகல தொடக்கம்…. இன்றைய ஸ்பெஷல் ஊர்வலம்….!!

திருப்பதியில் நாளை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்க இருக்கிறது இதற்கு பயன்படுத்தப்படும் தார்ப்பாய் மற்றும் கயிறு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாளை வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த கொடியை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் தார்ப்பாய் மற்றும் கயிறு ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதற்கு பயன்படுத்தப்படும் தார்பாய் ஒவ்வொரு ஆண்டும் வன ஊழியர்களால் வடமலைப்பேட்டை சுற்றியுள்ள வயல்களில் வளரும் தார்பாயை சேகரித்துக் கொண்டு வந்து வெயிலில் ஒரு வாரம் உலர வைத்து சுத்தம் செய்து பாய் மற்றும் கயிறு தயாரிக்கப்படுகிறது.

இந்த தார்ப்பாய் நேற்று வராஹ சுவாமி விருந்தினர் மாளிகையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் இருந்து வனத்துறை அலுவலர் சீனிவாச ரெட்டி மற்றும் ஊழியர்களால் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் ரங்கநாய்குலா விழா மண்டபத்தில் சேஷ வாகனத்தின் மீது பாய் மற்றும் கயிறு வைக்கப்படுகிறது.

Categories

Tech |