உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஆனது அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதனால் பாரதிய ஜனதா கட்சி தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலானது யோகி ஆதித்யநாத்திற்க்கு அவ்வளவு சுலபமாக இருக்காது என்று எண்ணப்படுகிறது.
இதே நேரத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளன. இதனால் சட்டமன்ற தேர்தலில் பிரபலங்களை களம் இறங்க வைக்க இருக்கிறோம். இதற்கான தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலானது தேர்தல் தேதி வெளியானதும் அறிவிக்கப்படும்” என கூறியுள்ளார்.