Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 12ம் தேதி…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான பணி இடங்கள் இன்றுவரை கலந்தாய்வுகள் மூலமாக நடத்தப்படாமல் இருந்தன. ஆனால் தற்பொழுது பள்ளி கல்வித்துறை முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் நிர்வாக வசதிகளுக்காக 32 வருவாய் மாவட்டங்களில் 66 ம் கல்வி மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல், நிர்வாக பணிகளை கவனித்தல், பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகளை நடத்தும்போது தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலை வழங்குதல் போன்றவற்றை மாவட்ட கல்வி அலுவலர் அவரது அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் கொண்டு செயல்படுத்துகிறார்.

இந்நிலையில் இந்த பணியிடங்கள் ஆனது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன. மேலும் தற்பொழுது பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் ஒரு  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, “மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனை போன்ற அனைத்து பணியிடங்கள் காலி பணியிடங்களாக  கருதப்பட்டு அக்டோபர் 12ம் தேதி மாலை 5 மணி மணிக்கு, அவரவர் பணிபுரியும் அலுவலகத்தில் பணி மூப்பின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பானது பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களை   மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |