தமிழ் திரைப்பட உலகில் அஜித் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் மட்டுமே உயர்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தற்போது இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
அஜீத் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பைக்கில் சில நாடுகளுக்கு பயணம் சென்று சில பிரபலங்களை சந்தித்து வருகிறார். இதனிடையே வலிமை படத்தின் சில புகைப் படங்கள் வெளியாகியுள்ளது. வலிமை படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வெளியான வலிமை புகைப்படம் காட்டுத்தீ போல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Valimai #Ajithkumar #HVinoth#ValimaiExclusiveStills pic.twitter.com/ai6Ktl7FMm
— 𝑴𝒂𝒅 𝑩𝒊𝒓𝒅 𝑺𝒕𝒖𝒅𝒊𝒐 (@madbirdstudio) October 6, 2021