Categories
உலக செய்திகள்

BREAKING : வேதியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு.!!

2021ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுவதாக பரிசுக் குழு அறிவித்துள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட், அமெரிக்காவின் டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.. வேதியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த ஆண்டும் விஞ்ஞானிகள் 2 பேருக்கு வழங்கப்பட்டது.. இந்த முறையும் அதே போல இரண்டு பேருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.. முன்னதாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 2 பேருக்கும், இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |