Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா…. தீவிரமாக நடைபெறும் முன்னேற்பாடுகள்…. கலெக்டரின் ஆய்வு….!!

உள்ளாட்சி தேர்தலின் முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தீவிர பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அலுவலகத்தில் இருக்கும் கிராம ஊராட்சிகளில் அமைந்திருக்கின்ற வாக்குச்சாவடி மையங்களுக்கு அனைத்து உபகரணங்களையும் அனுப்பி வைப்பதற்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்பின் கிராம ஊராட்சி வாக்குச்சாவடி மையங்களுக்கு அதிகாரிகள் மூலமாக பாதுகாப்புடன் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அனைத்து கிராம ஊராட்சி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன உபகரணங்களை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தையும் பார்வையிட்டுள்ளார். மேலும் நாட்டறம்பள்ளி பகுதியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Categories

Tech |