மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் தவறி விழுந்த நிலையில் லாரி மேலே ஏறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வி தனது மருமகன் குமரனுடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென மருமகன் பிரேக் போட்டுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தமிழ்செல்வி கீழே விழுந்துள்ளார். இதனை அடுத்து கீழே விழுந்த தமிழ்செல்வியின் மீது லாரி ஏறி சென்றதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.