சக மனிதர்களை அன்பாக மதிக்கக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று கோவில் குல பணிகளில் ஈடுபடுவீர்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலா பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். புகழ் ஓங்கும். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை விலகி செல்லும். எதிர்பார்ப்புகள் உங்களுக்கு சற்று பூர்த்தியாகும் நாளாகவும் இருக்கும். பணவரவு கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். சக தோழர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரவு நல்லபடியாக இருப்பதால் சேமிக்கக் கூடிய மனப்பான்மையை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று உங்கள் செயல் திறமை அதிகரிக்கும். வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நன்மை கொடுக்கும்.
மனதில் இருந்த கவலைகள் நீங்கி தைரியம் உண்டாகும். வீடு, மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். சக மாணவரிடம் மட்டும் கொஞ்சம் பொறுமையைக் கையாளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான காரியங்களுக்கு செல்லும்போதோ முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்