சட்ட விரோதமான செயலில் ஈடுபட்ட குற்றவாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிக்கரை அருகாமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாராய விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடியுள்ளார்.
அதன்பின் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர்.