பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இளவரசன் வேலை செய்யும் வங்கியில் பணம் கையாடல் செய்யப்பட்டதாகவும், கடன் வாங்கிய நபர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் ஒரு வருடத்திற்கு முன்பாக தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் கலையரசி தனது தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது மனைவியை பார்ப்பதற்காக இளவரசன் சில தினங்களுக்கு முன்பாக அவரின் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் கலையரசியின் அண்ணனான முருகேசன் என்பவரும் அவரின் மனைவியும் வெளியே சென்று விட்டு வந்து பார்த்த போது கலையரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கலையரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலையரசியின் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.