கம்பீரமான தோற்றம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!! இன்று பல வழிகளிலும் உங்களுக்கு பணவரவு ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். புதிய இனிய காதல் உறவு ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். இன்று வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தாமதமாகி வந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரவு கூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
எண்ணிய காரியங்கள் கைகூடும். நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். சக மாணவர்களிடம் மட்டும் ஒற்றுமையை பேணுவது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்