பெங்களூருவில் குழந்தைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு தம்பதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் ஆர்.டி. நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு ஆறு மாத கைக்குழந்தையும் அடங்கும். இந்த தம்பதி பணம் நகைகள் திருடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதாவது இந்த குழந்தைகளின் தாய் அவர் வசிக்கின்ற பகுதியை சுற்றியுள்ள குடியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு அதனை தன் கணவனிடம் கூறுவார். பின்னர் இருவரும் சேர்ந்து அவர்களுடைய குழந்தைகளை பயன்படுத்தி அந்த வீட்டிற்குள் சென்று திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
சம்பவத்தன்று அப்பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் கடந்த மாதம் 16ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட அந்தப் பெண் தன் கணவனிடம் கூறியுள்ளார். உடனே இருவரும் சேர்ந்து அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணம் அப்புறம் நகைகளை திருடி உள்ளனர். இதுகுறித்து ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கிடைக்கப்பெற்ற கைரேகையை பயன்படுத்தி போலீசார் இந்த தம்பதி கைது செய்துள்ளனர்.
மேலும் இவர்களிடமிருந்து எட்டரை லட்சம் மதிப்புள்ள சுமார் 193 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த தம்பதி கைதாகி இருப்பதன் மூலம் ஆறு திருட்டு வழக்குகளில் இருந்து ஆர்.டி நகர் போலீசார் தீர்வு கண்டுள்ளனர். மேலும் இந்த தம்பதியிடம் இருந்து 4 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.