சட்டென்று காதலில் பயப்படக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று மனைவி மகளுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரியிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். இன்று பணமுடை கொஞ்சம் ஏற்படக்கூடும். அதனால் கடன் வாங்க நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக எதையும் கையாளுங்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கப் பெறுவீர்கள். நிலுவையிலுள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரிய தடை அகலும். ஆனால் இன்று பணத்தட்டுப்பாடு மட்டும் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றார் போல் பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சிறப்பாகவே நடைபெறும்.
இன்று எந்திரங்கள் மற்றும் தீ ஆகியவற்றைக் கையாளும் பொழுது கவனமாக கையாளுங்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் காவி நிறம்