Categories
தேசிய செய்திகள்

பஜ்ஜியில் பாய்சன்…. தாய்-மகன் சாவு…. சோகத்தில் கிராம மக்கள்….!!!

பெலகாவி மாவட்டத்தில் பஜ்ஜி சாப்பிட்ட தாய் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவி மாவட்டம் ஹீதளி கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி(55 வயது) இவருடைய மகன் சோமலிங்கப்பா. இருவரும் விவசாயிகள் ஆவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் தோட்டத்தில் வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் பார்வதி பஜ்ஜி செய்துள்ளார். தாய் மகன் இருவரும் அந்த பஜ்ஜியை சாப்பிட்டுள்ளனர். பஜ்ஜி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இருவரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஜ்ஜி சாப்பிட்டதால் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது சாவுக்கான சரியான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |