Categories
மாநில செய்திகள்

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அப்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனால் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டு, மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப் பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு வருகின்ற 11ம் தேதி முதல் அக்டோபர் 18 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு 5 நாட்கள் நடைபெற உள்ளது. விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.125, இணையவழி பதிவு கட்டணம் 50.

கால அட்டவணை:

  • 08.11.2021 – தமிழ்
  • 09.10.2021 – ஆங்கிலம்
  • 10.11.2021 – கணிதம்
  • 11.11.2021 – அறிவியல்
  • 12.10.2021 – சமூக அறிவியல்

Categories

Tech |