Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “எதிரிகள் அடிபணிவார்கள்”… குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்..!!

நேர்மையான குணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு அதிகரிக்கும். எதிரிகள் அடிபணிவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணத்தில் சுகம் ஏற்படும். தனக்கென தனி வீடு அமையக் கூடிய சூழல் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி செல்லும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரின் அன்பு உங்களுக்கு கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை

Categories

Tech |