மிகத் தெளிவான சிந்தனை குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தனலாபம் பெருகும் . சகோதரர்களால் நன்மை ஏற்படும். அதன் காரணமாக மன தெம்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியும் பெருகும். எல்லாவகையிலும் சுகமும் நிம்மதியும் கூடும். இன்று எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லாம் நம்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பலம் பெறும். உங்களுடைய வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாகவே செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பிள்ளைகளுடன் மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள்.
குடும்பத்தாருடன் கலகலப்பாக காணப்படுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மட்டும் சிறப்பை கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்