Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “தொழில் வளம் பெருகும்”… பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு இருக்கும்..!!

தானம் தர்மத்தில் கொடை வள்ளலாக திகழக்கூடிய விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். வாகன யோகம் ஏற்படும். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையைக் கேட்டு நடந்து கொள்வது உங்களுடைய மனதிற்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினரின் வருகையும் இருக்கும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து மோதல்கள் விலகிச் செல்லும். இன்று சொத்துக்கள் கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

பழைய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளும் இருக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் நடக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இருந்தாலும் படித்த  படத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அந்த காரியம் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |