தமிழக முதல்வர் கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் பள்ளிகளை திறப்பது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் 9-12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் கடந்த மாதம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1-8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வானது வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. மேலும் இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களது வயது 12 என அக்டோபர் 1ஆம் தேதியில் நிறைவு பெற்றிக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து www.dge.tn.gov.in இணையதளத்தில் வருகின்ற 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் பதிவு செய்ய வேண்டும்.
மாறாக அவர்களால் 18ஆம் தேதி விண்ணப்பிக்க இயலவில்லை என்றால் கூடுதலாக 500 ரூபாய் செலுத்தி தட்கல் திட்டத்தின் கீழ் 20ஆம் தேதி தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இதனை 42 ரூபாய் மதிப்புள்ள தபால் தலை ஒட்டிய சுய முகவரி உடன் கூடிய உறையில் வைத்து தனித்தேர்வர்கள் அனுப்ப வேண்டும். இதனுடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்றிதழ் நகல் இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே இணைத்து முதன்முதலாக தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மதிப்பெண் சான்றிதழ் நகலையும் இணைத்து பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் ” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.