Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் Universal Credit திட்டம் ரத்து.. பிரதமர் அறிவிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு..!!

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தை ரத்து செய்ய தீர்மானிதத்திருப்பதால், ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு குழந்தை பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரிட்டன் அரசாங்கம் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தை ரத்து செய்ய தீர்மானித்திருக்கிறது. அதாவது, இத்திட்டமானது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, மாதம் ஒரு முறை அல்லது இருமுறை நிதியுதவி வழங்கும் திட்டமாகும். இதனால், குழந்தைகளுக்கு அதிக பயன் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த கொரோனா சமயத்தில் வாரந்தோறும், 20 பவுண்டுகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்தை அரசு ரத்து செய்ய தீர்மானித்திருப்பதால், நாடு முழுக்க பல குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனினும், பிரதமர் இத்திட்டத்தை ரத்து செய்ய தீர்மானித்திருப்பது சரியானது தான் என்று கூறியிருக்கிறார். இதனால் 1.9 மில்லியன் குடும்பங்களில் இருக்கும் 3.5 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இம்மாதம் 13-ஆம் தேதியிலிருந்து, அடுத்த மாதம் 12ஆம் தேதிக்குள் இத்திட்டம் நடைமுறைக்கு வரும். இதனால் ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு குழந்தை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளார்கள். பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள் பலர் பணிக்கு செல்பவர்கள்.

மேலும் இந்தத் தீர்மானத்தால் சிறுவர்களுக்கு உணவு மற்றும் உடை போன்றவற்றை பெறுவதில் சிக்கல் உண்டாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஒரு பெண் கூறுகையில், Universal Credit திட்டத்தை ரத்து செய்ததால், தம் பிள்ளைகள் தாங்கள் ஏழைகள் என்பதை அறிய வாய்ப்பு உள்ளது. இந்த சிறிய வயதில் அவர்களை பணம் குறித்து வருத்தப்பட வைப்பது கொடுமை என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |