Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. மும்முரமான பணியில் விவசாயிகள்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!

வங்கக்கடலில் சூறை காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் பண்ருட்டி, விருத்தாசலம் உள்பட 5 மாவட்டங்களில் தற்போது பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை இரவு ஆரமித்து காலை நேரம் வரை நீட்டித்து இருக்கிறது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. இதனையடுத்து தொடர் கனமழையால் விவசாயிகள் தங்கள் விவசாய பகுதிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |