இளம்பெண்ணின் இறப்பிற்கு காரணமான காதலன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்டகொண்டான் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம்பெண் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சங்கீதாவை சரவணகுமார் என்ற வாலிபர் காதலித்தது தெரியவந்துள்ளது. மேலும் சரவணகுமார் சங்கீதாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் சங்கீதா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில் சங்கீதாவின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சரவண குமார் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.