மின்னல் தாக்கியதால் சாலையில் மேய்ந்து கொண்டிருந்த 13 கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தீவிர கனமழை பெய்துள்ளது. அதன்பின் நரிக்குறவர் காலனியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்பவள்ளி என்ற மனைவி உள்ளார். இவருக்கு சொந்தமான 8 கால்நடைகளும் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகத்திற்கு சொந்தமான 5 கால்நடைகளும் வீட்டின் அருகாமையில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது கால்நடைகள் மீது திடீரென மின்னல் தாக்கி உள்ளது. இதில் 13 கால்நடைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்னல் தாக்கியதில் உயிரிழந்த கால்நடைகளை பார்வையிட்டுள்ளனர். அதற்கு பிறகு உடற்கூறு ஆய்வுகளை மேற்கொண்டு புதைத்துள்ளனர்.