9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று முதற்கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினர் குறுக்குவழியில் வாக்களித்து வருவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பூத் ஏஜெண்டுகளை மிரட்டி, அவர்களை வெளியே அனுப்பி, திமுகவினர் உள்ளே சென்று குறுக்கு வழியில் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
அந்த வேலை தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நியாயமான, அமைதியான ஒரு சுதந்திரமான நேர்மையான இந்தத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு அமோக வெற்றியை, மகத்தான வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெறும் என்று கூறியுள்ளார்.