Categories
மாநில செய்திகள்

மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சீர் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மாநில மனநல கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும், மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிபவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவப் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்காக நேற்று வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையாவது, “மனநலம் பாதிக்கப்பட்டு  தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரிந்த 396 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டு இருந்தது .

இதை வாசித்த நீதிபதிகள்” இவர்களில் ஒருவர் கூட அரசாங்கத்தால் சென்னையில் இருந்து மீட்கப்பட்டவர்கள் இல்லை. எனவே  தடுப்பூசியை சென்னையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து செலுத்த வேண்டும். இதனையடுத்து அவர்களுக்கு உரிய சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னர் அரசு மனநல காப்பகத்தில், மனநலம் பாதித்தவர்களில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை குறித்து தமிழக அரசானது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  உத்தரவிட்டு இவ்விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Categories

Tech |