Categories
உலக செய்திகள்

விண்ணப்பத்தை ஏற்காத பிரித்தானியா…. பாதிப்படைந்த வாழ்வாதாரம்…. மிரட்டல் விடுத்துள்ள மீனவர்கள்….!!

பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் மீனவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரெக்சிட்டுக்கு  பிறகு மீன் பிடிக்கும் உரிமம் குறித்து பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இடையே பிரச்சினை உருவாகியுள்ளது. இதனையடுத்து ஐரோப்பாவையும் பிரித்தானியாவையும் ஒன்று இணைக்கும் வழியான chennel சுரங்க வழியையும் துறைமுகத்தையும் அடைக்க போவதாக பிரான்ஸ் மீனவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அதிலும் பிரித்தானியாவிற்கு சொந்தமான ஜெர்ஸி தீவில்  மீன்பிடிக்க அனுமதி கோரி மீனவர்கள் அளித்திருந்த 45 விண்ணப்பங்களில் 12 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக பிரித்தானியா கடும் கோபம் அடைந்தது.

இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த நிலையில் வடக்கு பிரான்ஸ் மீனவர்கள் ஆணையத்தின் தலைவரான olivierlepretre  எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் “பிரித்தானியாவிற்கு செல்லும் அனைத்து ஐரோப்பிய மற்றும் பிரஞ்சு தயாரிப்புகளையும் தடுத்து நிறுத்தி விடுவோம். மேலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது கருத்தில் இருந்து பின் வாங்கவில்லை எனில் கிறிஸ்துமஸ் நேரத்தில் உணவு பொருட்கள் பிரித்தானியர்களுக்கு கிடைக்காத நிலை உருவாகும். அதுபோன்ற சூழல் உருவாகாது என்று நான் நம்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |