சத்திய ஞானசபையில் வள்ளலாரின் அவதார தினவிழா எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சத்திய ஞானசபையில் வள்ளலாரின் அவதாரத் தினவிழா நடைபெற்றுள்ளது. இந்த தினவிழாவில் தெய்வ நிலையத்தின் சார்பாக சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஞானசபையில் இசைநிகழ்ச்சி, சொற்பொழிவு மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதில் கொரோனா வழிகாட்டுதலின் படி பூஜைகள் எளிமையான முறையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வள்ளலார் அவதரித்த மருதூரில் தண்ணீரால் விளக்கேற்றி உள்ளனர். மேலும் கருங்குழி இல்லத்திலும் அவதார தினவிழா கொண்டாடப்பட்டு இருக்கிறது.