Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்”… எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்..!!

மற்றவர்கள் வியக்கும்படி காரியங்களை சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெற கூடிய மீனம் ராசி அன்பர்களே..!! இன்று தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனத்தை செலுத்துங்கள். தடைபெறும் காரியங்களை கண்டு தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். வாகன சுகம் குறையும். துணிவுடன் செயலில் இறங்குவீர்கள். இன்று தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். செலவுகள் மட்டும் அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இல்லை எனில் பலரையும் விரோதித்துக் கொள்ளக் கூடிய சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கக்கூடும்.

பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். வெளியூர் பயணத்தின் போது உடமைகள் மீது கவனம் இருக்கட்டும். புதிய முயற்சிகளில் ஓரளவு லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு கல்வியில் ஆர்வம் செலுத்தினால் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற் கொள்ளும் பொழுதோ அல்லது முக்கியமான காரியத்திற்கு  செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |