Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் ….! ஹிட்மேன் ரோகித்தின் மாஸ் சாதனை ….!!!

14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 90 ரன்னில் சுருண்டது .இதன்பிறகு களமிறங்கிய மும்பை அணி 8.2 ஓவரிலேயே 94 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா இப்போட்டிக்கு முன்பு வரை சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் தொடர் என இரண்டிலும் 398 சிக்சர் அடித்து விளாசி இருந்தார் .இதனிடையே நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 2  சிக்சர் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர்  என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 212 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 227 சிக்சர்கள் அடித்து விளாசியுள்ளார். இப்பட்டியலில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல்  357 சிக்சருடன் முதலிடத்தில் உள்ளார் .இதையடுத்து  249 சிக்சருடன் டிவில்லியர்ஸ் 2-வது இடத்திலும், 227 சிக்சருடன் ரோகித்சர்மா 3-வது இடத்திலும் உள்ளார். இதைத்தொடர்ந்து உலக அளவில் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் 1,042 சிக்சருடன் முதலிடத்திலும்,  பொல்லார்டு 758 சிக்சருடன் 2-வது இடத்திலும் , ஆந்த்ரே  ரசல் 510 சிக்ஸர் என அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர் .இந்திய அணி வீரர்களில் ரோகித் சர்மா 400 சிக்சருடன் முதல் இடத்தில் உள்ளார் .இதையடுத்து   சுரேஷ் ரெய்னா 336 சிக்ஸர், விராட் கோலி 316 சிக்ஸர் மற்றும் தோனி 304 சிக்ஸர் என உள்ளனர்.

Categories

Tech |