Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலில் வைத்திருந்த நகை…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பூசாரி…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவிலில் நகை, வெள்ளி வேல் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரவுசேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆதினமிளகி அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பாதுகாப்பு பணிக்காக 3 இரவு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அன்று காவலர்கள் பணிக்கு வரவில்லை. இந்த கோவிலில் உள்ள ஆதினமிளகி அய்யனாரை அப்பகுதியில் வசிக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இந்நிலையில் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து கோவிலுக்குள் மர்மநபர்கள் நுழைந்து பத்திரகாளி அம்மன் சன்னதி கதவின் பூட்டை உடைத்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 1 1\2 பவுன் தங்கச்சங்கிலி, வெள்ளி வேல் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். அதன்பின் பூசாரி மறுநாள் காலையில் கோவிலைத் திறந்து பார்த்த பொழுது அம்மன் சன்னதி கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பூசாரி பார்த்தபோது நகை, வெள்ளிவேல் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து பூசாரி தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |