Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மின்சாரம் தடை” அலட்சியத்தால் 3 பேர் மின்சாரம் பாய்ந்து பலி…… கன்னியகுமாரியில் சோகம்…!!

கன்னியாகுமாரியில் மின்சாரம் வரவழைக்க கம்பியை ஈரக்கம்பால் இளைஞர்கள் 3 பேர் தட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை அடுத்த குற்றியாபுரம்  மலைக்கிராமத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டு விட்டது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் அந்த ஊர் இளைஞர்கள் மூன்று பேர் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் மின்சாரம்  கடத்தும் இடத்திற்கு சென்று அங்கிருந்த கம்பியை ஈரக்கம்பால் தட்டி மின்சார வசதியை வரவழைக்க முயற்சித்துள்ளனர்.

Image result for மின்சாரம் பாய்ந்து பலி

மழை காலத்தில் கம்பு மிகவும் ஈரப்பதம் வாய்ந்ததாக இருந்ததால், அதிகப்படியான மின்சாரம் இளைஞர்கள் மூன்று பேரின் மீதும் பாய  சம்பவ இடத்திலேயே மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின் சம்பவம் குறித்து குளித்துறை காவல்நிலையத்திற்கு தகவல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |