நடிகர் பிருத்விராஜ் டிரைவிங் லைசன்ஸ் ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி இவர் தயாரிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான டிரைவிங் லைசென்ஸ் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. லால் ஜூனியர் இயக்கியிருந்த இந்த படத்தில் பிருத்விராஜ், மியா ஜார்ஜ், தீப்தி, சுரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தற்போது இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் டிரைவிங் லைசன்ஸ் ரீமேக் படத்தின் மூலம் பிரித்விராஜ் ஹிந்தியிலும் தயாரிப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். பிரித்விராஜுடன் இணைந்து கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. டிரைவிங் லைசென்ஸ் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.