Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை… அதிர்ச்சியில் கேம் பிரியர்கள்….!!!!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநில அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேற்று முதல் தடை விதித்துள்ளது. இந்த வரிசையில் சூதாட்டம், பந்தயம் அல்லது பணத்துக்காக விளையாடக் கூடிய ஆபத்தான விளையாட்டுக்கள் போன்ற அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை திறக்கும்போதே மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என்ற குறுஞ்செய்தி வந்துவிடுகிறது. இந்தியாவில் கேமிங் துறை தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஏராளமானோர் பல மில்லியன் டாலர்களை கேமிங் துறையில் முதலீடு செய்துள்ளனர். கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு இவர்களை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிக்கப்படுவோரின் நலனை கருத்தில்கொண்டு கர்நாடக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடைவிதித்துள்ளது.

Categories

Tech |