டோஷிபா நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக சூய்ச்சி ஈட்டோ பொறுப்பேற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலுள்ள சீனா நிறுவனமான டோஷிபாவின் நிர்வாக இயக்குனராக சூய்ச்சி ஈட்டோ பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே இவர் டோஷிபாவின் உலகளாவிய ஆற்றல் சார்ந்த தொழில்களிலும் பல்வேறு முக்கிய தொழிற்பிரிவுகளிலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். அதிலும் டோஷிபா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக டோமோஹிக்கோ ஒக்காடா என்பவர் கவனித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டோஷிபா நிறுவனம் இந்திய அரசின் மேக் இன் இந்தியா, க்ளீன் இந்தியா, ஸ்கில் இந்தியா போன்ற நலத்திட்டங்களுக்கு முக்கிய பங்கினை அளித்துள்ளது.
இது குறித்து ஈட்டோ கூறியதில் “நிலைத்த வளர்ச்சியை அடைவதற்கு தேவையான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை இந்தியாவிற்கு தொடர்ந்து வழங்க டோஷிபா நிறுவனம் தயாராக உள்ளது. அதிலும் டோஷிபா நிறுவனம் இந்தியாவிற்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நான் தொடர்ந்து பூர்த்தி செய்வேன்” என்றும் கூறியுள்ளார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக டோஷிபா நிறுவனத்தில் ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் ஆற்றல் சார்ந்த தொழில்துறையில் உள்ள உலகளவிய செயல்பாடுகள், தொழில்துறை மேம்பாடு, விற்பனை மற்றும் வணிக பணிகள் போன்றவற்றில் பதவி வகித்துள்ளார்.
குறிப்பாக இந்தியாவுடனான கூட்டணியானது அவர் பணி துவங்கிய காலத்தில் இருந்தே தொடங்கியுள்ளது. இவர் 1991 ஆம் ஆண்டு தெற்காசிய குழுவின் வெளிநாட்டு ஆற்றல் பிரிவில் முக்கிய அங்கமாக இருந்தார். மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனல் மின் நிலையத் திட்டத்தில் பணி புரிந்துள்ளார். அப்பொழுது இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்றிற்கு தேவையான மின்னாற்றல் வழங்கல் மற்றும் பரிமாற்றம் செய்யும் பணியில் பதவி வகித்துள்ளார்.