எரிசக்தி விலை உயர்வுக்கு ஐரோப்பா தான் காரணம் என்று ரஷ்யா அதிபர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டு எரிசக்திதுறைச் சார்ந்த அதிகாரிகளை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியதில் “ஐரோப்பா பெரும் தவறிழைத்துவிட்டது. அதிலும் spot சந்தைக்கு ஆதரவாக நெடுங்கால ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் எரிவாயு விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இந்த கொள்கையானது மிகவும் தவறு என்று தற்பொழுது புரியும்” என்று கூறியுள்ளார். மேலும் கடந்த புதன்கிழமை அன்று ஐரோப்பிய மற்றும் பிரித்தானியாவில் எரிவாயு விலையானது 25%திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக மேற்கு நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கவே ரஷ்யா எரிசக்தி வழங்கலை தடுத்து நிறுத்தியுள்ளது. அதிலும் ரஷ்யா மற்றும் ஜெர்மனியை இணைக்கும் Nord Stream 2 குழாய் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே வேண்டுமென்றே எரிசக்தி வழங்கலை தடுத்து நிறுத்தியுள்ளதாக விமர்சகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த புகார்களை ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov மறுத்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஏற்கனவே ரஷ்யா செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதன் கடமைகளை சரியாக நிறைவேற்றியுள்ளது. இனிமேலும் பொறுப்புடன் அதனை நிறைவேற்றும்” என்று கூறியுள்ளார்.