புனேவை சேர்ந்த பைக் பிரியர் ஒருவர் 30 ஆண்டுகளில் 550 பைக்குகளை சேகரித்து பராமரித்து வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் வினித். 55 வயதாகும் இவர் தனது பத்து வயதில் இருந்து பைக் மற்றும் ஸ்கூட்டர் மீது ஏற்பட்ட தீராத மோகத்தால் அன்று முதல் தன் வாழ்நாளில் எத்தனை பைக்குகளை வாங்க முடியுமோ அத்தனை பைக்குகளை வாங்கி வருகிறார். இவரிடம் தற்போது 550 பைக்குகள் இருக்கின்றன என்பது வியப்பிற்குரிய ஒன்றாகும்.
1940ஆம் ஆண்டுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பல வின்டேஜ் ரகம் பைக்குகளை இவர் வைத்துள்ளார். இதுபோக இவரிடம் முதல் செல்ஃப் ஸ்டார்ட் பைக்கும் உள்ளது. தற்போது இவரிடம் எல் எம் எல் வி 170 கெல்வின்டோர் ராஜட் ஸ்கூட்டர் என பல்வேறு வகைகள் உள்ளன. இவரிடம் உள்ள அனைத்து பைக்குகளும் தற்போது நல்ல கண்டிஷனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிக பைக்குகளை வைத்திருப்பதாக லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.