Categories
உலக செய்திகள்

பேஸ்புக் முடக்கம்…. கேலி செய்த ட்விட்டரின் CEO…. இணையதள பயனாளர்கள் இடையே விவாதம்….!!

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதை கேலி செய்து டுவிட்டர் நிறுவன CEO டுவிட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த திங்கட்கிழமை சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் திடீரென செயலிழந்தது. இதனால் சமூக வலைதள பயனாளர்கள் அனைவரும் சிரமப்பட்டனர்.
மேலும் சமூக வலைத்தள முடக்கத்திற்கு பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களிடம் மன்னிப்பு கூறியது.

இதனை தொடர்ந்து வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் புதன் கிழமை அன்று அதிகாலை மீண்டும் சேவையை தொடங்கியது. மேலும் சுமார் 7 மணி நேரங்களாக பேஸ்புக் நிறுவனதிற்கு சோந்தமான சேவைகள் முடங்கியது. இதன் விளைவாக பயனாளர்கள் அனைவரும் டுவிட்டர் மற்றும் டெலிகிராம் நோக்கி மொத்தமாக படையெடுக்க ஆரம்பித்தனர்.

குறிப்பாக டுவிட்டர் பயனாளர்கள் பேஸ்புக் டவுண் மற்றும் இன்ஸ்டாகிராம் டவுண் ஆகிய ஹேஷ்டேக்குகளை டிரெண்டு செய்து பேஸ்புக்கை கேலி செய்தனர். இந்த நிலையில் டுவிட்டர் பக்கம் புதிதாக வந்தவர்களை “hello literally everyone” என்று டிவிட்டர் நிறுவனம் டுவிட் செய்தது.

மேலும் “பேஸ்புக் இணையதளம் விற்பனைக்கு” என டுவிட் செய்யப்பட்ட பதிவிற்கு, டுவிட்டர் நிறுவன CEO ஜேக் டார்சி “அதன் விலை எவ்வளவு” என கேலி செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவினை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |