சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்பவர்களுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
சாலை விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றி சரியான நேரத்திற்குள் மருத்துவமனையில் கொண்டு செய்பவர்களுக்கு ரூபாய் 5,000 பரிசாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதேபோல் வருடத்திற்கு 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்த புதிய திட்டம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக ரூபாய் ஐந்து லட்சத்தை மானியமாக போக்குவரத்து துறை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற பொதுமக்களை ஊக்கப்படுத்த இந்த புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.