Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் 34,773 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாய விலை கடைகளில் 6.95 கோடி குடும்பங்கள் மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். மேலும் புது கார்டுகள் விண்ணப்பிக்க tnpds.gov.in என்ற இணையதளத்தில் மூலம்  விண்ணப்பிக்கலாம்.இந்த இணையதளத்தில் ரேஷன் கார்டில் உறுப்பினர்களை பெயரை சேர்க்க மற்றும் நீக்க , முகவரி மாற்றம் செய்ய மற்றும் குடும்பத்தலைவரை மாற்றம் செய்வது போன்ற பல்வேறு வசதிகளை அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் போது ஆதார் கார்டு மற்றும் முகவரி சான்று போன்ற ஆவணங்களின் நகலையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால்  முக்கியமான ஆவணங்கள் இல்லை என்று சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உணவு துறை அதிகாரி கூறியது, ஆவணங்கள் இல்லை என்றாலும் மறுபரிசீலனை விண்ணப்பம் என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் விண்ணப்பதாரர்கள் மறுபரிசீலனை செய்வதற்கு  அவரின் செல்போன் எண்ணை பதிவு செய்து பிறகு  ஒடிபி என்னை பதிவு செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து விண்ணப்பதாரரின் விவரங்களில் பக்கத்தில் தேவைப்படும் ஆவணங்களை திருத்தம் செய்து பதிவேற்றல்லாம். அதற்காக tnpds.gov.in என்ற இணையதளத்தில் மறுபரிசீலனை என்ற வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |