Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல் முழுவதும் பரவிய கட்டி….. அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை…. சென்னையில் பரபரப்பு….!!

தவறான சிகிச்சை அளித்ததால் 7 வயது சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய லட்சிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட லட்சிதாவை அவரது பெற்றோர் கடந்த மாதம் 27 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர் சிறுமிக்கு ஊசி போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து அந்த சிறுமியின் கழுத்தில் கட்டி ஏற்பட்டு அது பெரியதாக மாறி உடல் முழுவதும் பரவி விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட லட்சிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் சிறுமியின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு அங்கிருந்த கண்ணாடி மற்றும் விளம்பர பலகைகளை அடித்து நொறுக்கி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது தவறான சிகிச்சை அளித்ததால் தான் சிறுமி உயிரிழந்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதற்கு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பிறகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |