Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இங்க ஏன் இவ்வளவு கூட்டம்…. மைய அதிகாரிக்கு எச்சரிக்கை…. டி.ஐ.ஜி-யின் செயல்….!!

வாக்குச்சாவடியில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்த வேட்பாளர்களை காவல்துறை டி.ஐ.ஜி பாண்டியன் அடித்து விரட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் ஓட்டு போட்டு கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது சில வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் இணைந்து அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்தை கடந்து வந்து வாக்குச்சாவடி மையம் வளாகத்துக்கு உள்ளே புகுந்து அங்கு வந்த பொதுமக்களிடம் தாங்களின் சின்னங்களை காண்பித்து வாக்குகளை சேகரித்து கொண்டிருந்திருக்கின்றனர்.

அதன்பின் இது குறித்து காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சரக டி.ஐ.ஜி பாண்டியன் அதிரடிப் படையினருடன் வாக்குச்சாவடி மையம் வளாகத்திற்குள் சென்று வாக்காளர்களை தவிர தேவை இல்லாமல் நின்று கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மைய அதிகாரியை நேரில் அழைத்து வாக்காளர்களை தவிர்த்து வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என கண்டிப்புடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

Categories

Tech |